அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம் - 638 108. திருப்பூர் மாவட்டம்
கல்லூரி மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு – 2026–2027
காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தங்களது மகன்/மகள் சேர்க்கைக்காக வேண்டி விண்ணப்பித்து இருந்தீர்கள். அதற்கான சிறப்பு கலந்தாய்வு எங்களது கல்லூரியில் 05.06.2026 அன்றும் , மற்றும் பொது கலந்தாய்வு 08.06.2026 அன்றும் சரியாக காலை 10.00 மணிக்கு தொடங்கும். அது சமயம் கீழ்க்கண்ட சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.
கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும்பொழுது கொண்டு வர வேண்டிய அசல் மற்றும் நகல்கள்:
1. மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள் – 3
2. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் & நகல்கள் – 3
3. 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் & நகல்கள் – 3
4. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் & நகல்கள் – 3
5. ஜாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள் – 3
6. மாணவர் புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்) – 3
7. இணையதள விண்ணப்பப் படிவம் – 3
8. சேர்க்கைக்கட்டணம் : ரூபாய் 2563/-
9. ஆதார் அட்டை நகல் – 3
10. மாணவரது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் (புகைப்படத்துடன் கூடிய பக்கமும் சேர்த்து) முதல் பக்க நகல் – 3
கலந்தாய்விற்கு வரும் மாணவ மாணவியர் கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வருகை தரவேண்டும். கல்விக்கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகு சேர்க்கைப் பூர்த்தி ஆகும்.
முதல்வர்
தேவைப்படும் விவரங்களுக்க கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்:
9942199487
9965009657
9677407480
9894676746